2010-10-08 16:30:33

தாய்லாந்தில் மரணதண்டனைக்கெதிராகத் திருச்சபை


அக்.08,2010. ஆறு ஆண்டுகளாக மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாய்லாந்தில் மீண்டும் அது உருவெடுத்திருப்பது குறித்து அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

வாழ்வு புனிதமானது மற்றும் விலை மதிப்பற்றது என்பதால் மரணதண்டனைக்கு எதிராகத் தாங்கள் போராடி வருவதாக வெளிநாட்டுக் கைதிகளுக்கான இயேசு சபை பணியகத்தின் தலைவரான Vilaiwan Phokthavi கூறினார்.

அக்டோபர் 10 இஞ்ஞாயிறன்று மரணதண்டனை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆர்வலர்களுடன் தாய்லாந்து திருச்சபையும் இணைவதாக Phokthavi தெரிவித்தார்.

தாய்லாந்தில் 2003ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின்னர் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக 2009ல் இருவர் லீத்தல் ஊசி மூலம் கொல்லப்பட்டனர். இது மரணதண்டனை கைதிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.