2010-10-07 16:11:43

மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றம் வெற்றிகரமாக நடைபெற இந்திய கத்தோலிக்கர்களின் செபங்கள்


அக்.07,2010 வத்திக்கானில் நடைபெறவிருக்கும் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றம் வெற்றிகரமாக நடைபெற இந்திய கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் உண்ணா நோன்பு, மற்றும் செபங்களை மேற்கொண்டுள்ளனர்.
‘சவுதி அரேபியாவுக்கான கிறிஸ்துவின் படை’ என்ற பொருள்படும் CASA (Christ Army for Saudi Arabia) என்ற அமைப்பைக் சீரோ மலங்கரா ரீதி அருள்தந்தை George Joshua கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
2006ம் ஆண்டு அருள்தந்தை Joshua சவுதி அரேபியாவில் ஓர் இல்லத்தில் திருப்பலி நிகழ்த்தியதற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் இந்தியா திரும்பியதும், திருவனந்தபுரத்தில் CASA அமைப்பை ஆரம்பித்தார்.
சவுதி அரேபியாவில் வாழும் மூன்று லட்சம் இந்திய கிறிஸ்தவர்கள் உட்பட பத்து லட்சம் கிறிஸ்தவர்களுக்கு எந்தவித ஆன்மீகப் பணியும் வெளிப்படையாகத் தரப்படுவதில்லை என செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு மாமன்றம் அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த சில மாதங்களாக இம்மாமன்றத்தின் வெற்றிக்காக CASA அமைப்பினர் உண்ண நோன்பு, செபங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதாக அருள்தந்தை George Joshua கூறினார்.







All the contents on this site are copyrighted ©.