2010-10-07 16:10:48

சீனாவில் நடைபெறும் ஐ.நா.வின் சுற்றுச் சூழல் மாற்றம் குறித்த கருத்தரங்கின் வெற்றிக்குக் கத்தோலிக்கர்கள் சிறப்பு செபங்கள்


அக்.07,2010 இத்திங்கள் முதல் சனிக்கிச்ழமை வரை சீனாவின் Tianjin நகரில் நடைபெறும் ஐ.நா.வின் சுற்றுச் சூழல் மாற்றம் குறித்த கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவேற சீனக் கத்தோலிக்கர்கள் சிறப்பு செபங்களை எழுப்பி வருகின்றனர்.
சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஐ.நா.வின் இக்கருத்தரங்கு முதல் முறையாக சீனாவில் நடைபெறுகிறது.
சுற்றுச் சூழலைக் காப்பதற்கு தனிப்பட்டவர்களும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கூறி வரும் Tianjin புனித யோசேப்புப் பேராலயத்தின் பங்கு குரு Leo Zhang Liang, செயல் முறை எடுத்துக்காட்டாக எப்போதும் சைக்கிள் பயணத்தையே மேற்கொள்கிறார்.சுற்றுச் சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளை நிறுத்தவேண்டும் என்று தொழில் மயமாக்கப்பட்டுள்ள 37 நாடுகளின் தீர்மானங்கள் இந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டு வருகின்றன. இச்சனிக் கிழமை வரை நடைபெறும் இக்கருத்தரங்கு நவம்பர் 29 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை Cancun ல் நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யும் ஒரு கருத்தரங்கு என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.