2010-10-06 16:44:52

மத்திய பிரதேச முதலமைச்சர் தன் இல்லத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நடத்த இருக்கிறார்


அக்.06, 2010 மத்திய பிரதேச முதலமைச்சர் தன் இல்லத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்திருப்பது அப்பகுதியில் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல முயற்சி என்று மத்திய பிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய பிரதேச பல்சமயத் தலைவர்கள் முதலமைச்சர் Shivraj Singh Chauhanஐ அவரது இல்லத்தில் அண்மையில் சந்தித்தபோது, அயோத்தி பிரச்சனை குறித்து வெளியான தீர்ப்புக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தில் அமைதி நிலவ முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவரைப் பாராட்டினர்.

அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் ஒத்துழைத்தால் மத்திய பிரதேசம் இன்னும் பல முன்னேற்றங்களைக் காண முடியும் என்று கூறிய முதலமைச்சர், மத நல்லிணக்கத்தின் ஒரு முயற்சியாகத் தன் இல்லத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஒற்றுமையையும், ஒப்புரவையும் வளர்ப்பதற்கு நல்லதொரு முடிவு என்று கூறிய போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்த வழக்குகளும் விரைவில் தீர்க்கப்பட்டால், மத நல்லிணக்கம் வளர இன்னும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.