2010-10-06 16:47:45

இன்றைய உலகின் கல்வி நிலையை உயர்த்த இன்னும் ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை UNESCO நிறுவனத்தின் அறிக்கை


அக்.06, 2010 இன்றைய உலகின் கல்வி நிலையை உயர்த்த இன்னும் ஒரு கோடி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்று ஐ.நா.வின் UNESCO நிறுவனம் கூறியுள்ளது.

இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட உலக ஆசிரியர் நாளையொட்டி, கருத்தரங்குகளை நடத்திய ஐ.நா.வின் பல்வேறு அமைப்புக்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியம், பணியிடங்களில் காணப்படும் குறைகள், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்குள்ள குறைவான மரியாதை ஆகிய காரணங்களால், இளையோருக்கு இப்பணி மீது ஆர்வம் குறைந்துள்ளதென UNESCOவின் தலைமை அதிகாரி Irina Bokova கூறினார்.

உலகில் நடக்கும் இயற்கைப் பேரழிவுகள் அல்லது சமுதாயத்தில் ஏற்படும் கலவரங்கள் நேரத்தில் நல்ல ஆசிரியர்களின் வழிநடத்துதல் இருந்தால், குழந்தைகளும், இளையோரும் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று UNESCOவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

உலகின் எல்லா நாடுகளிலும், சிறப்பாக பின் தங்கியுள்ள நாடுகளில் உள்ள அரசுகள், ஆசிரியர்கள் குறித்த விடயங்களில் இன்னும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும், இது சமுதாயத்தை கட்டியெழுப்ப சிறந்த வழி என்று ஐ.நா.வின் அறிக்கை வலியுறுத்துகிறது







All the contents on this site are copyrighted ©.