2010-10-06 16:43:29

இத்தாலிய பாராளு மன்றத்தில் கர்தினால் Oswald Gracias உரையாற்றினார்


அக்.06, 2010 இந்தியாவின் மக்கள் தொகையில் கத்தோலிக்கர்கள் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெருமளவில் உழைத்து வருகின்றனர் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.

இச்செவ்வாயன்று இத்தாலிய பாராளு மன்றத்தில் உரையாற்றுகையில் இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை உயர்மறைமாவட்டப் பேராயருமான கர்தினால் Gracias இவ்வாறு கூறினார்.

‘துறவு மடங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று பொருள்படும் ‘Salva i Monasteri’ என்ற அமைப்பின் சார்பில் Elizabeth Valguisti என்பவர் உருவாக்கிய 'இந்தியாவின் கிறிஸ்தவர்கள்' (India’s Christians) என்ற ஆவணப்படம் இச்செவ்வாயன்று இத்தாலிய பாராளு மன்றத்தில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு முன், இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களைக் குறித்து உரையாற்றிய கர்தினால் Gracias, இந்தியாவில் கிறிஸ்தவ வரலாற்றையும், இன்று இந்தியாவில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்திய கத்தோலிக்கத் தலைவர் ஒருவர் இத்தாலிய பாராளு மன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.