2010-10-05 15:43:13

சோதனைக்குழாய் கருவளர்ச்சி குறித்த நன்னெறி சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளார் திருப்பீட அதிகாரி ஒருவர்.


அக்.05,2010. சோதனைக்குழாய் கருவளர்ச்சிக்கு வித்திட்ட பேராசிரியர் ராபர்ட் எட்வர்ட்ஸ்க்கு மருத்துவத்திற்கான நொபெல் விருது வழங்கப்பட்டிருப்பது குறித்த நன்னெறி சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளார் திருப்பீட அதிகாரி ஆயர் Ignacio Carrasco de Paula

சோதனைக்குழாய் வழி குழந்தை பிறப்பைக் கண்டுபிடித்தவருக்கு மருத்துவத்திற்கான நொபெல் விருது வழங்கியதில் அவ்விருது நிறுவனம் நன்னெறி சார்ந்த கேள்விகளை புறந்தள்ளியுள்ளது எனக் குற்றஞ்சாட்டிய, வாழ்விற்கானத் திருப்பீடக் கல்விக் கழகத்தின் தலைவர் ஆயர் கராஸ்கோ தெ பவுலா, பேராசிரியர் எட்வர்ட்ஸின் இச்சிகிச்சை முறையாலேயே மனிதக் கரு முட்டைகள் வியாபாரப் பொருளானதும், வளர்ச்சியடைந்த கருக்கள் பெருமெண்ணிக்கையில் குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்படுவதும் துவங்கின என்றார்.

சோதனைக்குழாயில் வளரும் கரு தாயின் கர்ப்பப்பையை சென்றடைந்து குழந்தையாக உருப்பெறுவதைக் குறித்து மகிழும் நாம், இச்சோதனையில் உயிரிழக்கும் அல்லது வீணாக வீசப்படும் முதிர்க் கருக்கள் குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் கராஸ்கோ தெ பவுலா.








All the contents on this site are copyrighted ©.