2010-10-05 15:44:16

அக்டோபர் 20 அனைத்துலக புள்ளி விபரக் கணக்கெடுப்பு நாள்


அக்.05,2010. நமது சமுதாயங்களை வடிவமைப்பதிலும் பொருளாதார-சமூக வளர்ச்சி உட்பட மில்லென்னிய வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடையவும் புள்ளி விபரக் கணக்கெடுப்புகள் முக்கிய கருவிகளாக அமைகின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.

இம்மாதம் 20ம் தேதி உலகில் முதன் முறையாக புள்ளி விபரக் கணக்கெடுப்பு நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், இவ்வாண்டில் மக்கள்தொகை மற்றும் குடியிருப்பு குறித்தக் கணக்கெடுப்பில் மட்டும் 300 கோடிப் பேர் பங்கு பெறுவர் என்றார்.

எல்லா மக்களும் தங்கள் நாடுகளில் இடம் பெறும் இந்தப் புள்ளி விபரங்கள் குறித்த நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்குமாறு இந்த முதல் உலக நாளை முன்னிட்டு அழைப்பு விடுப்பதாக அச்செய்தியில் கூறியுள்ளார் மூன்.

ஐ.நா. புள்ளி விபரக் கணக்கெடுப்புக் கமிஷன் 1947ல் உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.