2010-10-04 16:18:27

கோவா மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சுற்றுச்சூழல் சீர்கேடு இடம்பெற்றுள்ளதாக தலத்திருச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.


அக் 04, 2010. கோவா மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சுற்றுச்சூழல் சீர்கேடு இடம்பெற்றுள்ளதாக அம்மாநில தலத்திருச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

சுரங்கத்தொழில், குப்பைப்பிரச்சனை, நில நிர்வாகம் போன்றவைகளில் அரசின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டும் கோவா காரித்தாஸ் மற்றும் மறைமாவட்ட சமூக நீதி மற்றும் மறைமாவட்ட அவையின் ஒன்றிணைந்த அறிக்கை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அனைவரின் ஒன்றிணைந்த கடமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. கோவாவின் சுரங்கத்தொழில் காற்று, தண்ணீர், நிலம் ஆகியவற்றில் ஏற்படுத்திவரும் மிகப்பெரும் அழிவுகளைப்பற்றிக் கவலைக் கொள்ளாத மாநில அரசு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் அனைத்தையும் மறைக்கப்பார்க்கிறது எனவும் தலத்திருச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

அனுமதியற்ற சுரங்கத்தொழிலால் அம்மாநிலத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது கோவா திருச்சபையின் சமூக நீதி மற்றும் அமைதி அவை.








All the contents on this site are copyrighted ©.