2010-10-04 16:19:37

உகாண்டாவைப் பொருளாதாரச் சரிவின் பாதிப்புக்களிலிருந்து காப்பாற்ற உலக வங்கி பத்து கோடி டாலர்களை வழங்கியுள்ளது


அக்.04, 2010 உலகில் நிலவும் பொருளாதாரச் சரிவின் பாதிப்புக்களிலிருந்து உகாண்டாவைக் காப்பாற்ற உலக வங்கி பத்து கோடி டாலர்களை இத்திங்களன்று வழங்கியுள்ளது.



உகாண்டாவில் காணப்படும் முன்னேற்றம் மிகவும் மெதுவாகச் செல்வதற்கு அங்கு காணப்படும் ஊழல்களும், நிர்வாகத் துறைகளில் காணப்படும் குறைபாடுகளும் முக்கிய காரணங்கள் என்று உலக வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



இத்தொகையானது உகாண்டாவின் நலத்துறை, கல்வி, தண்ணீர் வசதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று உலக வங்கியின் உகாண்டா நாட்டு மேலாளர் குந்தவி கதிரேசன் கூறினார்.



உகாண்டாவில் 1997ம் ஆண்டு 44 விழுக்காடாக இருந்த வறியோரின் எண்ணிக்கை 2006ம் ஆண்டு 31 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்றும், இந்நாட்டில் உலக வங்கியின் உதவியுடன் துவக்கப்பட்டுள்ள 20 திட்டங்களுக்கு உலக வங்கி 150 கோடி டாலர்கள் நிதி உதவி செய்துள்ளதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.