2010-10-04 15:38:25

அக்டோபர் 5 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1793 - பிரெஞ்சுப் புரட்சியில் பிரான்சில் கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டது.

1795 - இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

1799 - ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

1864 - இந்தியாவின் கல்கத்தா நகரம் பெரும் புயலால் ஏறக்குறைய முழுவதும் அழிந்தது இதில் சுமார் அறுபதாயிரம் பேர் இறந்தனர்.

1886 - தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாப்ரிக்காவின் ஜொகானஸ்பெர்க் நகரம் உருவாக்கப்பட்டது.

1915 - பல்கேரியாவில் முதலாம் உலகப் போர் தொடங்கியது.

1944 - பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.

அக்டோபர் 5 அனைத்துலக ஆசிரியர் தினம்







All the contents on this site are copyrighted ©.