2010-10-04 15:37:33

அக்டோபர் 5 நாளும் ஒரு நல்லெண்ணம்


வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் 1823ம் ஆண்டு அக்டோபர் ஐந்தில் பிறந்தார். இந்த நல்ல நாளில் அவரின் ஆன்மீகச் சிந்தனைகளில் சில......

இங்கே இறைவன் ஒருவன்தான். இறவாமை கல்விக்குத்தான். மனிதன் இனங்கள் பல கண்டாலும் இறப்பில் எல்லோரும் ஒன்றே.

தாழ்ந்த குலம், உயர்ந்த குலம் என்று தரம் பிரித்து பார்க்கின்றோம். நரை, மரணம், மூப்பு அறியாத நல்லுடம்பைப் பெற்றவரல்லவா நற்குலத்தவர்

கருணை நிறைந்தவராயிருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கட்டும்; உடம்பெங்கும் வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தைக் காணச் சகியாதவரே

கருணைமிக்கவர். அடுத்தவர் படும் இன்னலைத் துடைத்தெறிவதே கருணை உள்ளம்.

நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொதுநல நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும்

அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் தமது இன்னருளை வழங்குவார்.








All the contents on this site are copyrighted ©.