2010-10-02 14:42:36

அக்டோபர் 2 அனைத்துலக அகிம்சா தினம்


அக்.02,2010. அமைதியை ஏற்படுத்துவதற்கானப் பணி அரசுகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் மட்டும் சார்ந்ததல்ல, மாறாக இதற்காக ஒவ்வோர் ஆணும் பெண்ணும் உழைக்க வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியான இச்சனிக்கிழமை அனைத்துலக அகிம்சா தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், அமைதி என்பது ஒவ்வோர் ஆண் மற்றும் பெண்ணிலிருந்து பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குடும்பங்களும் தனியாட்களும் வன்முறையைத் தோற்கடித்து அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றுரைத்த மூன், இந்தச் சர்வதேச அகிம்சா நாளில் நமக்கும் நமது சிறாருக்கும் அமைதி மற்றும் நீதியான சமூகங்களைக் கட்டி எழுப்புவோம் என்று அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.