2010-10-01 15:59:11

ஜனநாயகம் மற்றும் உறுதியான மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு நைஜீரியர்கள் உழைக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


அக்.01,2010. ஞானம்நிறைந்த சட்டங்கள் மூலம் ஜனநாயகம் மற்றும் உறுதியான மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு நைஜீரியர்கள் உழைக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

நைஜீரியா சுதந்திரமடைந்தன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு நைஜீரிய அரசுத்தலைவர் Goodluck Ebele Jonathanக்குத் திருத்தந்தை எழுதிய கடிதம் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சனால்(Peter Turkson) இவ்வியாழனன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா 1960ம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து அந்நாடு அரசியல் மற்றும் பொது வாழ்வில் மேற்கொண்டு வரும் முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, அந்நாட்டினரின் அமைதி மற்றும் வளமைக்காக ஒவ்வொருவரும் உழைப்பதற்கு அரசுத்தலைவர் வழியாகத் தான் ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்







All the contents on this site are copyrighted ©.