2010-10-01 16:03:31

காமன்வெல்த் விளையாட்டுக்களின் போது மனித வியாபாரம் அதிகரிக்கக் கூடும் - கிறிஸ்தவ சமூகம் கவலை


அக்.01,2010. புதுடெல்லியில் அக்டோபர் 3ம் தேதி இஞ்ஞாயிறன்று தொடங்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுக்களின் போது மனித வியாபாரம் அதிகரிக்கக் கூடும் என்று கிறிஸ்தவ சமூகமும் தன்னார்வ அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

இது குறித்து Fides வத்திக்கான் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த வடகிழக்கு இந்திய தன்னார்வ அமைப்பு ஒன்றை உருவாக்கிய அருட்பணி மது சந்திரா, வடகிழக்கு இந்தியாவிலிருந்து பல சிறுமிகளைக் கொண்டு வருவதற்கு மனித வியாபாரிகள் ஈடுபட்டுள்ள செய்தி கவலை தருகின்றது என்றார்.

இந்த மனித வியாபாரம் நான்காயிரம் கோடி டாலரை ஈட்டித்தரும் வேளை தற்சமயம் இந்த வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குரு சந்திரா தெரிவித்தார்








All the contents on this site are copyrighted ©.