2010-09-29 16:08:42

தென் கொரியாவில் அனைத்து மதத்துறவிகள் மேற்கொள்ளும் உண்ணா நோன்பு போராட்டம்


செப்.29,2010. தென் கொரியாவில் உள்ள கத்தோலிக்க, பிற கிறிஸ்தவ, புத்தத் துறவிகள் கூடி அக்டோபர் மாதம் 4 முதல் 6 வரை உண்ணா நோன்பு போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
தென் கொரிய அரசு மேற்கொள்ளவிருக்கும் நான்கு நதித் திட்டத்திற்கு எதிர்ப்புக்கள் எழுந்து வரும் இவ்வேளையில், கொரியாவின் அனைத்து மதத் துறவிகளும் இணைந்து இத்திட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளும் இந்த முயற்சி இந்நாட்டைப் பொறுத்த வரை ஒரு முதல் முயற்சி என்று அருள்தந்தை Augustine Maeng Joo-Hyung கூறினார்.இந்த உண்ணா நோன்பு போராட்டம் Seoulலுள்ள அரசுத் தலைவர் மாளிகை முன் மூன்று நாட்கள் நடைபெறும் என்றும், இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான துறவிகள் கலந்து கொள்வர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.