2010-09-29 16:08:54

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனைக் குறித்து இந்தியாவின் உச்ச நீதி மன்றம் கேள்வி


செப்.29,2010. ஒரிஸ்ஸாவில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் பிரதிநிதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனைக் குறித்து இந்தியாவின் உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2008ம் ஆண்டு Parikhit Nayak என்ற கிறிஸ்தவர் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் பிரதானுக்கு ஜூலை மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த ஜாமீனை ஏன் இரத்து செய்யக்கூடாதெனக் கேள்வி எழுப்பி, ஒரிஸ்ஸா மாநிலத்தை விளக்கம் கேட்டுள்ளது இந்திய உச்ச நீதி மன்றம்.
மனோஜ் பிரதான் மற்றொரு கொலைக் குற்றத்திற்காக செப்டம்பர் 9ம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.2008ம் ஆண்டு ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கலவரங்களின் விளைவாக, மனோஜ் பிரதான் மீது இரண்டு கொலைக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பதும், மேலும் மூன்று புகார்கள் அவர் மீது எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.