2010-09-28 15:09:28

ஹெய்ட்டியில் அழிவுக்குள்ளான அனைத்துக் கோவில்களையும் கத்தோலிக்கப் பள்ளிகளையும் மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் அறிவிப்பு


செப்.28,2010. ஹெய்ட்டி நாட்டில் நில அதிர்ச்சியில் அழிவுக்குள்ளான அனைத்துக் கோவில்களையும் கத்தோலிக்கப் பள்ளிகளையும் மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் உலகின் பல்வேறு திருச்சபை அமைப்புகளையும் இணைப்பதற்கு அந்நாட்டு ஆயர்கள் இசைவு அளித்துள்ளனர்.

இம்மாதம் 22 முதல் 26 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமியில் அமெரிக்க ஐக்கிய நாடு, அர்ஜென்டினா, கானடா, கொலம்பியா, தொமினிக்கன் குடியரசு, எல் சால்வதோர், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் கத்தோலிக்க அதிகாரிகளையும் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான வளர்ச்சி வங்கியின் அதிகாரிகளையும் சந்தித்து விவாதித்த ஹெய்ட்டி ஆயர்கள், திருச்சபைக் கட்டிடங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில், உதவும் நோக்குடைய அனைத்து குழுக்களையும் ஈடுபடுத்த இசைவு அளித்துள்ளனர்.

திருச்சபை கட்டிடங்களைக் கட்டியெழுப்புவதுடன், ஹெய்ட்டி மக்களையும் முழுமையான ஒரு வளர்ச்சியில் கட்டியெழுப்ப தலத்திருச்சபை திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.