2010-09-28 15:08:49

கொரியாவில் அதிக மக்களின் நம்பிக்கைக்கு உரிய மதம் கத்தோலிக்கமே - அண்மை ஆய்வு


செப்.28,2010. கொரியாவில் அதிக மக்களின் நம்பிக்கைக்கு உரிய மதமாகச் செயல்படுவது கத்தோலிக்கமே என அந்நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

Sisain என்ற கொரிய வார இதழ், நம்பிக்கைக்குரிய இரு மதங்களைத் தேர்ந்தெடுக்கும்படி அண்மையில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் 57.6 விழுக்காட்டினர் கத்தோலிக்கத்தையும், 50 விழுக்காட்டினர் புத்தமதத்தையும், 26.4 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சமூகப் பிரச்சனைகளில் மக்கள் சார்பாக நிற்கும் திருச்சபையின் உறுதிப்பாடே, கத்தோலிக்கம் பெருமளவான மக்களால் விரும்பப்படுவதற்கான காரணம் எனவும் இந்தக் கருத்து வாக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.