2010-09-28 15:06:43

கத்தோலிக்கர்களின் விசுவாசம் அவர்களின் தினசரி வாழ்வில் காணக்கூடியதாக இருக்கவேண்டும் - பேராயர் நிக்கோல்ஸ் அழைப்பு


செப்.28,2010. கத்தோலிக்கர்களின் விசுவாசம் அவர்களின் தினசரி வாழ்வில் காணக்கூடியதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

திருத்தந்தையின் திருப்பயணம் முடிவுற்றபின் அதன் விளைவுகள் குறித்து கடந்த ஞாயிறன்று அப்பெருமறைமாவட்டத்தின் 214 பங்குத்தளங்களில் வாசிக்கப்பட்ட பேராயரின் மேய்ப்புப்பணி சுற்றறிக்கை, விசுவாசம் என்பது நம் வாழ்வில் காணக்கூடியதாக இருக்கவேண்டுமெனில், விசுவாசத்தின் முதற்கனியாகிய ஜெபத்திற்கு நம் வாழ்வில் அதற்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என கத்தோலிக்கர்களை விண்ணப்பிக்கிறது.

திருத்தந்தை தன் திருப்பயணத்தின்போது விண்ணப்பித்தது போல் கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் பொதுவாழ்வில் சாட்சிகளாக விளங்கவேண்டும் என அச்சுற்றுமடலில் கேட்டுள்ளார் பேராயர் நிக்கோல்ஸ்.

துன்பத்தில், துயரத்தில் இருப்போருக்கு நம் ஜெபங்களை வழங்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனவும் பேராயர் கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.