2010-09-28 15:09:01

ஆஸ்திரேலியாவின் முதல் புனிதர் நினைவாகத் தபால் தலை


செப்.28,2010. முத்திபேறு பெற்ற மேரி மக்கில்லாப் (Mary MacKillop) ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரில் முதலாவதாகப் புனிதர் பட்டம் பெறவிருக்கும் நிகழ்ச்சியை ஓட்டி, அவர் நினைவாகத் தபால் தலை ஒன்றை வெளியிட அந்நாட்டு தபால் துறை தீர்மானித்துள்ளது.

புனிதராகும் இவரது புகைப்படம் 1890களில் எடுக்கப்பட்டதை இத்தபால்தலையில் பிரசுரிக்க உள்ளனர்.

இப்புனிதரின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூறும் வண்ணம் இத்தபால் தலை வெளியிடப்படுகிறதெனவும், இவர் புனிதராகும் திருச்சடங்கையொட்டி திருவிழிப்புகள், திருயாத்திரைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தபால் துறை மேலாளர் Noel Leahy கூறினார்.

1842ஆம் ஆண்டு பிறந்த மேரி மக்கில்லாப், 1866ம் ஆண்டு திரு இதய யோசேப்பின் சகோதரிகள் என்ற சபையை நிறுவி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென அயராது உழைத்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இவரை 1995ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார் என்பதும், வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி இவர் ‘சிலுவையின் புனித மரியா’என்ற பெயருடன், ஆஸ்திரேலியாவின் முதல் புனிதராக உயர்த்தப்படுவார் என்பதும் குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.