2010-09-25 09:33:42

செப்டம்பர் 25 நாளுமொரு நல்லெண்ணம்


Yellow Hawk என்ற அமெரிக்கப் பழங்குடியினர் தலைவர் ஒருவரின் செபம்
அனைத்திலும் வாழும் ஆவியே, உமது குரலைக் காற்றில் கேட்கிறேன்.
உமது சந்நிதி வந்திருக்கும் என் குரலைக் கேளும்.
உமது அழகில் என்னை நடத்திச் செல்லும்.
ஒவ்வொரு சூரிய உதயத்திலும், மறைவிலும் நான் அழகைக் காண,
என் கண்களுக்குச் சொல்லித் தாரும்.
உமது படைப்பு ஒவ்வொன்றையும் நான் மரியாதையுடன் தொடுவதற்கு
என் கரங்களுக்குக் கற்றுத் தாரும்.
ஒவ்வொரு சிறு இலையிலும் பூவிலும்
நீர் மறைத்து வைத்திருக்கும் பாடங்களை நான் பயில உதவும்.
என் சக மனிதரை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் கொள்ளாத வண்ணம்
எனக்கு வலிமையைத் தாரும்.
நான் என்ற பெரும் பகையை என் வாழ்நாள் முழுவதும்
போரிட்டு வெல்லும் வழிகளைச் சொல்லித் தாரும்.
ஒவ்வொரு நாளும் உம்மைச் சந்திக்க நான் வரும்போது,
தூய கரங்களுடனும், நேர் கொண்ட பார்வையுடனும்உமது சந்நிதி வர எனக்குப் பழகித் தாரும்.







All the contents on this site are copyrighted ©.