2010-09-25 15:54:41

கொலம்பியாவில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்குப் புதிய பாதைத் திறக்கப்பட்டுள்ளது பேராயர் கோமஸ்


செப்.25,2010. கொலம்பியாவில் FARC புரட்சிக் குழுவின் தலைவர் விக்டர் ஹூலியோ சுவாரெஸ் ரோஹாஸின் மரணம் அந்நாட்டில் புரட்சியாளர்களுடன் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்குப் புதிய பாதையைத் திறந்துள்ளது என்று கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ruben Salazar Gomez கூறினார்.
இலத்தீன் அமெரிக்காவில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பழைய கெரில்லா அமைப்பான FARC ன் இராணுவத் தலைவர் ரோஹாஸ், அரசுப்படையினால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வானது அந்தப் புரட்சிப்படையினர் அரசியல் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு வாய்ப்பாக அமைகின்றது என்றுரைத்த பேராயர் கோமஸ், கொலம்பியா நீண்ட காலமாக எதிர்நோக்கும் அமைதிக்கு இது வழிவகுக்கும் என்றார்.தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் போர் முடிவதற்கான நேரம் வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.