2010-09-25 15:55:11

ஆஸ்திரேலியா மற்றும் கிறிஸ்மஸ் தீவின் சிறைகளில் இன்னும் 645 சிறார்


செப்.25,2010. ஆஸ்திரேலியா மற்றும் கிறிஸ்மஸ் தீவின் சிறைகளில் இன்னும் 645 சிறார் வைக்கப்பட்டுள்ளனர் என்று புனித வின்சென்ட் தெ பவுல் கழகத்தின் தேசிய அவையின் டாக்டர் John Falzon கூறினார்.
சிறார் கைது செய்யப்படுவதை நிறுத்துவதற்கு 2008ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் Falzon வலியுறுத்தினார்.
புனித வின்சென்ட் தெ பவுல் கழகம் சிட்னியில் நடத்தும் தேசியக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய அரசுக்கு இவ்வழைப்பை முன்வைத்தார் டாக்டர் John Falzon. ஆஸ்திரேலியச் சிறைகளில் 448 சிறாரும் கிறிஸ்மஸ் தீவுச் சிறைகளில் 197 சிறாரும் வைக்கப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.