2010-09-24 15:46:31

வியட்நாம் கத்தோலிக்கர் மரணதண்டனையை முழுவதுமாக இரத்துச் செய்ய நடவடிக்கை


செப்.24,2010. வியட்நாமில் இன்னும் அதிக மனிதாபிமானத்தோடு கூடிய மரணதண்டனை நிறைவேற்றலை அரசு பரிந்துரைத்துள்ள அதேவேளை,அந்நாட்டுக் கத்தோலிக்கர் மரணதண்டனை முழுவதுமாக இரத்துச் செய்யப்படுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மரணதண்டனை கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதைவிட லீத்தல் ஊசி போட்டுக் கொல்லப்படுவது அதிக மனிதாபிமானம் நிறைந்த செயலாக இருக்கின்றது என்று வியட்நாம் சட்ட அமைப்பாளர்கள் கூறி, குற்றவியல் தீர்ப்பு மசோதாவில் இந்த மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். வியட்நாம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இம்மசோதா 2011ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி அமலுக்கு வரும்.

மரணதண்டனையை எதிர்நோக்கும் கைதிகளுக்கு நச்சு கலந்த ஊசி குறைந்த வேதனையை அளிக்கும் மற்றும் உடலையும் அப்படியே வைத்திருக்கும், செலவும் குறைவு, உளவியல்ரீதியான பிரச்சனையையும் குறைக்கும் என்று சட்ட அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், லீத்தல் ஊசி முறையும் கைதிகளைக் கொலை செய்கின்றது என்று சொல்லி மரணதண்டனை முழுவதுமாக இரத்துச் செய்யப்படுமாறு கத்தோலிக்கர் வலியுறுத்தி வருவதாக அந்நாட்டுக் குரு Pierre Phan Khac Tu கூறினார்.







All the contents on this site are copyrighted ©.