2010-09-24 15:42:15

நவீனகால இத்தாலிய இளவயதுப் பெண் கியாரா முத்திப்பேறு பெற்றவர் என அறிவிக்கப்படுகிறார்


செப்.24,2010. நவீனகால இத்தாலிய இளவயதுப் பெண் ஒருவர் இச்சனிக்கிழமை உரோமையில் முத்திப்பேறு பெற்றவர் என அறிவிக்கப்படவிருக்கிறார்.

உரோம் இறையன்பு அன்னைமரி திருத்தலத்தில் இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவுள்ள Chiara Badano என்ற இளைஞி 18 வயதை எட்டிய போது எலும்பு புற்று நோயால் தாக்கப்பட்டார்.

அதுவரை ஆடல் பாடல் டென்னிஸ் விளையாட்டு என நவீனகால இளம் பெண்ணாக வாழ்ந்த கியாரா, Focolare இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

இயேசுவைத் தனது வாழ்வில் மையப்படுத்தி வாழ்ந்த கியாரா, 1990ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, தனது 19வது வயதில் இறந்தார். “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்பதே கியாரா தனது தாயிடம் கூறிய கடைசி வார்த்தைகளாகும்.

கியாராவுக்கு உடை உடுத்தும் போது “அவள் இயேசுவைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு செய்யுமாறு” அவள் தன் தாயிடம் கூறியிருக்கிறாள். இவளது இரு கண்களும் இரு இளையோருக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.