2010-09-24 15:48:03

கேரளாவில் மறதி நோயாளிகள் அதிகரிப்பு


செப்.24,2010. கேரள மாநிலத்தில் வாழும் முதியவர்களில் ஒன்றேகால் இலட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15 ஆண்டுகளில் இது 80 இலட்சமாக அதிகரித்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலுள்ள முதியவர்களில் முப்பது விழுக்காட்டினர் கேரளாவில் வாழும்வேளை இவர்களில் நான்கு விழுக்காட்டினர் மறதி நோயால் துன்பப்படுகின்றனர் என்று தேசிய முதியோர் கொள்கைகளுக்கான துறை நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தங்களை மறதி நோய்த் தாக்கி உள்ளதை அறியாமல் பலரும் இருப்பதாகவும், இவ்வாறு கேரளாவில் மட்டும் ஒன்றே கால் இலட்சம் பேர் இருப்பதாகவும் அந்தக் கணக்கெடுப்பில் மேலும் தெரிய வந்துள்ளது.

இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.