2010-09-24 15:44:14

அயோத்தி தீர்ப்புத் தொடர்பான வகுப்புவாத வன்முறைகளைத் தடுப்பதற்குத் திருச்சபை அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை


செப்.24,2010. இந்தியாவின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே அதையொட்டிய வகுப்புவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் மத்திய பிரதேச திருச்சபை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் தலத்திருச்சபை தொடங்கியுள்ள ஹாட்லைன் குறித்துப் பேசிய அருள்திரு ஆனந்த் மொட்டுங்கல், மக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து அவ்விடத்தில் நடைபெறும் சம்பவங்களை விளக்கினால் உடனே காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

1992ம் ஆண்டு அழிக்கப்பட்ட அயோத்தி மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதி மன்றம் இவ்வெள்ளியன்று வெளியிட இருந்தது. ஆயினும் உச்ச நீதிமன்றம் இதற்கு ஒரு வார காலம் தடை விதித்துள்ளது.

இது ஒத்திவைக்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. ""அயோத்தி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க முடியும். அப்படி நடக்கவில்லை எனில், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டே தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அதை ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்,'' என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி கூறினார்







All the contents on this site are copyrighted ©.