2010-09-24 15:47:16

அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்தப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


செப்.24,2010. அணு அச்சுறுத்தல் இல்லாத உலகை அமைப்பதற்கு உலக நாடுகள் ஐ.நா.ஆதரவு பெற்ற அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்துமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய அளவில் சட்டத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்தும் விதிமுறை இல்லாதவரை அணுப் பரிசோதனை நடத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்று பான் கி மூன் மேலும் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் உயர்மட்ட அளவிலானக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் மூன்.

அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 182 நாடுகளில் 153 அதனை அமல்படுத்தியுள்ளன. இவ்வொப்பந்தம் செயல்திட்டம் பெறுவதற்கு இன்னும் 44 நாடுகள் அமல்படுத்த வேண்டும். இவற்றில் ஏற்கனவே 35 அமல்படுத்தியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.