2010-09-23 15:48:28

வரிகளைக் குறித்த விவாதங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு ஏழைக் குடும்பங்களை மனதில் வைத்து விவாதிக்க வேண்டும் - அமெரிக்க ஆயர் பேரவை


செப்.23, 2010. வரிகளைக் குறித்து மேற்கொள்ளும் விவாதங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு ஏழைக் குடும்பங்களை மனதில் வைத்து விவாதிக்க வேண்டுமென்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் முன்னேற்றத்திற்கான குழுவின் தலைவரான ஆயர் வில்லியம் மர்பி அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில் அரசுக்கு அண்மையில் எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கான வரியைக் குறைப்பதால் அல்லது விலக்குவதால் அமெரிக்காவில் ஏற்கனவே பசியால் வாடும் நாற்பது லட்சம் சிறுவர் சிறுமிகளோடு, இன்னும் ஆறு லட்சம் குழந்தைகள் சேர்க்கப்படுவர் என்று ஆயர் பேரவையின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் கூறுகிறது.அரசு மேற்கொள்ளும் எந்த விவாதமும் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டாதாய் இருக்கவேண்டுமென்றும், முக்கியமாக, பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள முடியாமல் இன்னும் போராடி வரும் மக்களைக் கருத்தில் கொண்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஆயர் மர்பி இக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.