2010-09-23 13:57:21

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு


செப்.23,2010. அன்பர்களே, மாமன்னன் ராஜராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் கட்டடக் கலை நுட்பத்துக்கு சான்றாகத் திகழ்கிறது. இந்தப் பெருவுடையார் கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா இப்புதன்கிழமை மாலை தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழா இஞ்ஞாயிறு வரை ஐந்து நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராஜேந்திரன் அவர்கள் இவ்விழாத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர். எனவே அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பெரிய கோவிலின் சிறப்புகள் குறித்துக் கேட்டோம்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.