2010-09-23 15:48:14

சொமாலியா நாட்டில் அரசை உருவாக்கும் முயற்சிகளுக்குத் தடைகள் உள்ளன - Mogadishuவுக்கான திருப்பீடத்தின் நிர்வாகி


செப்.23, 2010. தனிப்பட்டவர்களுக்கிடையேயானப் பகை உணர்வுகள் சொமாலியா நாட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அரசை உருவாக்கும் முயற்சிகளுக்குத் தடையாக உள்ளதென Mogadishuவுக்கான திருப்பீடத்தின் நிர்வாகி கூறியுள்ளார்.
சோமாலியா நாட்டு இடைக்கால அரசின் பிரதமாராக இருந்த Omar Abdirashid Sharmarke இச்செவ்வாயன்று தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, Mogadishuவுக்கான திருப்பீடத்தின் நிர்வாகி ஆயர் Giorgio Bertin, Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினார்.
பிற நாடுகளிலிருந்து அந்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகைகளை யார் மேற்பார்வை செய்வது என்பதில் பதவியில் உள்ளவர்களிடையே எழுந்துள்ள போட்டிகள் சோமாலியா நாட்டை மிகவும் பாதித்து வருகிறதென ஆயர் Bertin விளக்கினார்.பிற நாட்டு உதவித் தொகையைக் கையாளுவதில் ஏற்பட்டுள்ள போட்டிகளால் அந்நாடு ஒரு போரையே சந்திக்கலாம் என்றும், இந்தப் போட்டிச் சூழலில், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மக்களைக் கட்டுப்படுத்தும் ஆபத்தும் உள்ளதெனவும் திருப்பீடத்தின் நிர்வாகி தன் கருத்தைக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.