2010-09-23 15:41:13

"சூடானில் அமைதி நிலவ 101 நாட்கள் செபம்" என்ற ஒரு முயற்சியை ஆரம்பித்துள்ளது அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை


செப்.23, 2010. இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக அமைதி நாளையொட்டி, "சூடானில் அமைதி நிலவ 101 நாட்கள் செபம்" என்ற நாடு தழுவிய ஒரு முயற்சியை சூடானிய கத்தோலிக்க ஆயர் பேரவை ஆரம்பித்துள்ளது.
இந்த முயற்சியில் கத்தோலிக்கத் துயர் துடைப்புச் சேவைகளும், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையும் இணைந்துள்ளன.
சூடானின் அமைதி ஆப்ரிக்க கண்டத்தின் அமைதிக்கு அவசியம் என்பதும், தெற்கு சூடானில் வருகிற ஜனவரியில் மேற்கொள்ளப்பட விருக்கும் மக்கள் கருத்தெடுப்பு முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதும் இச்செப முயற்சிகளின் காரணம் என்று Fides செய்தி நிறுவனத்திற்கு, சூடானிய கத்தோலிக்க ஆயர் பேரவையால் அனுப்பப்பட்டுள்ள செய்தி கூறுகின்றது.அனைத்துலக அமைதி நாளான செப்டம்பர் 21 ஆரம்பமான இந்த 101 நாட்கள் செபம் 2011ம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபை கொண்டாடும் உலக அமைதி நாளான சனவரி முதல் தேதியன்று நிறைவு பெறும்.







All the contents on this site are copyrighted ©.