2010-09-22 14:57:42

செப்டம்பர் 23 – நாளும் ஒரு நல்லெண்ணம்


வருங்காலத்திலிருந்து கடன் வாங்காதீர்கள். எதிர்காலம் குறித்த தேவையற்றக் கவலைகளை விட்டொழியுங்கள்.

வாழ்க்கையை முடிந்த வரையில் எளிதாக்குங்கள். அக்கறை என்பதையும் கவலையையும் பிரித்துப் பார்க்கப் பழகுங்கள்.

பெரியப் பிரச்னைகளைத் தடுக்க வேண்டுமெனில், எப்போதெல்லாம் மெளனம் காப்பது என்பதை தெரிந்து வைத்திருங்கள். குறைவாகப்பேசி, நிறைவாகச் செவிமடுங்கள்.

உங்கள் திறமைகளைவிட குறைகளை அதிகமாகத் தெரிந்து கொண்டு திட்டங்களைத் தீட்டுங்கள். ஓய்வுக்கு நேரம் கொடுங்கள். சிறிது நேரமாவது தனிமையில் செலவிடுங்கள். நல்லவர்களோடு நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை முளையிலேயேக் கிள்ளிவிடுங்கள். ஏமாற்றத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே சிறு சிறுப் பாலங்களைக் கட்டுபவர்களாக இருங்கள். வாய் விட்டுச் சிரியுங்கள். மன்னிக்கும் பண்பை வளருங்கள். ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லும் முன், அன்று என்ன நல்ல காரியம் புதிதாகச் செய்தோம் என்பதைக் குறித்துச் சிந்தியுங்கள். இவை போதும் நாம் நாளை புது மனிதர்களாக உருவெடுக்க.








All the contents on this site are copyrighted ©.