2010-09-21 15:40:13

ஆப்கானிஸ்தானில் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர்.


செப். 21, 2010. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலையீடு, அங்கு மேலும் வன்முறைகளுக்கும் மக்களின் பாதுகாப்புக் குறைவுக்கும் காரணமாக இருந்துவருவதால் , அந்நாட்டில் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் Pax Christi இயக்கத்தின் தலைவராகிய ஆயர் Gabino Zavala உரைக்கையில், கடந்த ஒன்பது ஆண்டுகளின் அமெரிக்கத் தலையீட்டு விடுதலைப் போர் எவ்விதத்திலும் அந்நாட்டு மக்களுக்கு உதவுவதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு வருடங்களாக மனிதாபிமான உதவிகளுக்கென அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கி வந்த நிதி பெருமளவில் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆயர், கடந்த ஆண்டில் 182 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, ஒன்றிணைந்த மனித வளர்ச்சியில் ஆப்கானிஸ்தான் 181வது இடத்தில் இருப்பதையும் எடுத்தியம்பினார்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் அந்நாட்டில் அமெரிக்கத் துருப்புகளின் இருப்பு தேவை என வாதிடும் குழுக்கள், இவ்வாய்வு தரும் உண்மை நிலைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் Pax Christi இயக்கத்தின் தலைவரும் லாஸ் ஆஞ்சல்ஸ் துணை ஆயருமான ஆயர் Zavala .








All the contents on this site are copyrighted ©.