2010-09-21 15:39:19

17,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் அடிமைகளாகக் கடத்தப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சீனக் காவல்துறை அறிவிக்கிறது.


செப். 21, 2010. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 17,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் அடிமைகளாகக் கடத்தப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சீனக் காவல்துறை அறிவித்துள்ளது.

அண்மை காலமாக சீனக்குழந்தைகள் அடிமைகளாகக் கடத்தப்படுவது குறித்த புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நடவடிக்கைகளில் இறங்கிய சீன காவல்துறை மனித கடத்தல்களில் ஈடுபடும் 2398 குழுக்களை உடைத்ததோடு 15,673 பேரை கைதும் செய்துள்ளது.

கடத்தப்பட்ட குழந்தைகள் குறித்த விவரங்களையும் சேகரித்து, அவர்களை பெற்றோரிடம் சேர்க்கும் முயற்சியில் 813 குழந்தைகள் பெற்றோருடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சீன காவல்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் கடத்தப்படும் குழந்தைகள் கடத்தல்காரர்களால் செங்கல் தயாரிப்புத் தொழிலில் வலுக்கட்டாயமாக வேலைக்கமர்த்தப்படுவதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.