2010-09-20 15:34:05

பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிக்கு உலக நாடுகளின் உதவிகள் மிகவும் தேவை - ஐ.நா.வின் தலைமைச் செயலர்


செப். 20, 2010. பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிக்கு அகில உலக நாடுகளின் உதவிகள் மிகவும் தேவை என்று ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் கூறினார்.

இந்த வெள்ளம் உலக அளவில் நமது ஒற்றுமைக்கும், உதவி செய்யும் மனப்பான்மைக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று, இஞ்ஞாயிறன்று நியூயார்க்கில் ஐ.நா. அவையின் உயர்மட்டக் கூட்டமொன்றில் பேசுகையில், பான் கி மூன் கூறினார்.

இதுவரை உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கி, இஸ்லாமிய உயர்மட்ட அமைப்புக்கள், வளைகுடா ஒற்றுமை அமைப்பு என்று பல நிறுவனங்களும் பெருமளவில் உதவிகள் செய்திருந்தாலும், இன்னும் 200 கோடி டாலர்கள் மதிப்புக்கான உதவித் தொகையை ஐ.நா.அவை கேட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் நிகழ்ந்துள்ள இம்மாபெரும் இயற்கைப் பேரிடரைச் சந்தித்தது ஐ.நா.வின் வரலாற்றில் பெரியதொரு சவால் என்றும் மில்லேன்னியத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் ஏற்கனவே பெரும் சவால்களைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இது இன்னும் பெரிய சோதனையாக அமைந்துள்ளதெனவும் ஐ.நா.வின் தலைமைச் செயலர் இஞ்ஞாயிறன்று நடந்த கூட்டத்தில் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.