2010-09-20 15:35:33

தென் மற்றும் வட கொரியா இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் பணிகளில் தலத்திருச்சபை.


செப். 20, 2010. தென் மற்றும் வட கொரியா இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெண் துறவறத்தார் பற்றிய கூட்டம் ஒன்றை ஏற்பாடுச் செய்வதற்கு இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இசைவு அளித்துள்ளனர்.

வரும் ஆண்டின் துவக்கத்தில் இக்கூட்டத்தைச் சீனாவின் ஷங்கையில் நடத்துவதற்கு பரிந்துரைத்துள்ளது வட கொரிய கத்தோலிக்க அவை. இதற்கிடையே, நவம்பர் மாத மத்தியில் Pyongyangல் ஒப்புரவு மற்றும் ஒத்துழைப்புக் கூட்டத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவ்வவை விண்ணப்பித்துள்ளது. 1950க்கும் 53க்கும் இடைப்பட்டக் காலத்திலான கொரியப் போரில் இரு கொரிய நாடுகளிடையேப் பிரிந்தக் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுவரும் வேளையில், இரு நாடுகளின் தலத்திருச்சபைகளும் ஒப்புரவுக்கானப் பணிகளை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.