2010-09-20 15:35:21

சீனக் கத்தோலிக்கக் குருக்கள் மேல் படிப்புக்கென தாய்வானுக்குச் செல்வது குறித்து சீன அரசுக்கும் தாய்வான் தலத்திருச்சபைக்கும் இடையே இசைவு.


செப். 20, 2010. சீனக்குருக்கள் தாய்வானில் வந்து படிப்பதற்கான உதவிகளை வழங்க தாய்வான் தலத்திருச்சபை எப்போதும் தயாராக இருப்பதாக அறிவித்தார் பேராயர் John Hung Shan-Chuan.

தாய்வான் நாட்டில் 15பேர் கொண்ட சீன அரசுப்பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி பயணம் மேற்கொண்டு வரும் சீன மத விவகாரங்களுக்கான அரசு உயர் அதிகாரி Wang Zuo'an , கத்தோலிக்கப் பேராயரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, புத்தம், இஸ்லாம், பிற கிறிஸ்தவர்கள் மற்றும் தாவோயிஸ தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

தாய்வான் கத்தோலிக்க அதிகாரிகளைச் சந்தித்த பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீன அதிகாரி வாங், தாய்வானிலும் உலகின் ஏனையப் பகுதிகளிலும் சீனக்குருக்களுக்கு வழங்கப்படும் குருத்துவப் பயிற்சிக்காக கத்தோலிக்கத் திருச்சபையைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.