2010-09-20 15:33:31

ஆப்ரிக்காவில் எயிட்ஸ் பரவல் குறிப்பிடத்தகும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


செப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான ஐ.நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.

எயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆப்ரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.

ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.