2010-09-18 16:27:32

ஆங்கிலிக்கன் பேராயருடன் ஆன சந்திப்பின்போது திருத்தந்தையின் உரை.


செப். 18, 2010. கான்டர்பரியின் புனித தாமஸ் மூர் இரத்தம் சிந்தி கிறிஸ்துவுக்கு சாட்சியாக விளங்கிய அதே இடத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலும் ஆங்கிலிக்கன் பேராயர் ராபர்ட் ரன்ஸியும் இணைந்து ஐக்கியம் எனும் கொடைக்காகச் செபித்தனர். நாமும் அக்கொடைக்கான நம் ஜெபங்களைத் தொடர்வோம்.

ஆங்கிலிக்கன் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கூட்டு சர்வதேச அவை உருவாக்கப்பட்ட பின்னான கடந்த 40 ஆண்டுகளில் வளர்ந்துள்ள ஆழமான நட்புணர்வுக்கும் உரையாடல் முன்னேற்றத்திற்கும் அனைவரும் ஒன்றிணைந்து நன்றி கூறுவோம். ஆன்மீக ஊட்டச்சத்திற்கான ஒரு பரவலான தாகம் மக்களிடையே இருப்பினும், இன்றையக் கலாச்சாரம் தன் கிறிஸ்தவ மூலத்திலிருந்து விலகிச்செல்வதை ஒருபக்கம் காண்கிறோம். மறுபக்கமோ பல்வேறு இனங்களின் ஒன்றிணைந்த வாழ்வுப் பெருக்கத்தால் பிற மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. இத்தகைய வாய்ப்புகள் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு சாட்சிய வாழ்வுக்கான வழிகளைத் திறக்கின்றன. கிறிஸ்தவ சபைகளிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒன்று. அது அமைதியையும் இணக்க வாழ்வையும் இவ்வுலகில் ஊக்குவித்து அதன் வழி நற்கனிகளைக் கொணரும்.








All the contents on this site are copyrighted ©.