2010-09-17 16:29:04

புனித மரியா பல்கலை கழகத்தின் மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை


RealAudioMP3
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அங்கு நிறுவப்பட்டுள்ள ஒரு விளையாட்டு அரங்கத்திற்கு இரண்டாம் ஜான் பாலின் பெயர் சூட்டப்பட்டிருப்பதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தவராய் தன் உரையைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் அனைத்து மாணவர்களிடமும் பேசக்கூடிய வாய்ப்பு அனைத்து திருத்தந்தையருக்கும் கிடைப்பதில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன். இந்த அரிய வாய்ப்பில் உங்களிடம் நான் கூற விழைவது இதுதான். இன்று இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களில் பலர் 21ம் நூற்றாண்டின் புனிதர்களாக மாறுவீர்கள் என்பது என் நம்பிக்கை.
புனிதராக மாறுவது உங்களுக்கு முடியாத ஒரு காரியம் என்று உங்களில் பலர் நினைக்கலாம். நான் விளக்க முயல்கிறேன். புகழ் பெற்ற பலரைப் பின்பற்றும் ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். யாரை நாம் பின்பற்ற, யாரைப் போல் வாழ விழைகிறோம் என்பதைச் சிறிது ஆராயலாம்... என்று கூறிய திருத்தந்தை அங்குள்ள இளையோரிடம் கடவுளை அவர்களது நண்பர்களாய் ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த நட்பின் வெளிப்பாடாக, கடவுளின் மதிப்பீடுகளை உள்வாங்கி வாழ ஆரம்பித்தால், புனிதராவது எளிது என்று விளக்கினார் திருத்தந்தை. RealAudioMP3
தன் உரையின் இறுதியில் அங்குள்ளோர் பலரை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் மாத்ரீதில் நடைபெறும் உலக இளையோர் மாநாட்டில் சந்திக்க விழைவதாகக் கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.