2010-09-17 16:43:46

ஐராப்பிய பாராளுமன்றம் திருத்தந்தையின் சுற்றுமடல் குறித்து விவாதித்தது.


செப். 17, 2010. திருத்தந்தை இன்று மக்களுக்கு வழங்கும் உரைகள் மக்களுக்கு மட்டுமல்ல பெரிய நிறுவனங்களுக்கும் பயன்தருபவைகளாக உள்ளன என்றார் அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில், திருத்தந்தையின் சுற்றுமடல் குறித்த கலந்துரையாடலில் பங்குபெற்ற பிரான்சின் அரசியல்வாதி மாரியோ மௌரோ.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் ‘காரித்தாஸ் இன் வெரித்தாத்தே’ என்ற சுற்றுமடலை அரசியல், பொருளாதாரம் மற்றும் இறையியல் கண்ணோட்டத்துடன் விவாதித்தபோது, அது பொது நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கம் தருவதாக இருந்தது என்றார் அவர்.

அமைதி மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஏற்கும் எவரும் அனைத்து மனித குலத்திற்கும் பயன் தரும் திருத்தந்தையின் பரிந்துரைகளை ஏற்காமல் இருக்கமுடியாது என்றார் Strasbourg இன் சுதந்திர மக்கள் கட்சியின் தலைவர் மௌரோ.

மக்கள் முன்னேற்றத்திற்கு 'உண்மையில் பிறரன்பு' என்பதை திருத்தந்தை வலியுறுத்தியுள்ளது முக்கியமான கருத்து எனவும் கூறினார் அந்த அரசியல்வாதி.








All the contents on this site are copyrighted ©.