2010-09-17 16:43:16

இந்தோனேசியாவில் மதச்சுதந்திரத்திற்கான பாதுகாப்பு வேண்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்.


செப். 17, 2010. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவிலுள்ள பெகாஸி எனுமிடத்தில் இரு கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டுத் தலைநகரின் காவல்துறை தலைமை அலுவலகம் முன் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.

சட்ட அமுலாக்கத்திலும் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதிலும் ஈடுபடவேண்டிய காவல்துறையினர் தாக்குதல்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமலும், வன்முறைகளை அனுமதிப்பதுவுமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்றனர் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்.

இந்தோனேசியாவில் அனைத்துக்குடிமக்களின் மதச்சுதந்திரத்தைப் பாதுகாப்பதை உறுதிச் செய்யவேண்டியது காவல்துறையின் கடமை என வலியுறுத்தியுள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்களின் அமைப்பு.








All the contents on this site are copyrighted ©.