2010-09-17 16:42:39

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக திருத்தந்தையின் திருப்பயணம் இருக்கும். - ஆங்கிலிக்கன் சபை பிரதிநிதி.


செப். 17, 2010. ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையே மேலும் புரிந்துகொள்ளுதலுக்கு உதவும் இணைப்புப்பாலங்களைக் கட்டியெழுப்ப உதவும் கருவியாக திருத்தந்தையின் பிரிட்டனுக்கான திருப்பயணம் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருப்பீடத்திற்கான கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயரின் பிரதிநிதி.

மிகப்பெரிய இறையியலாளரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளை எப்போதும் இன்முகத்துடனேயே வரவேற்றுள்ளார் என்ற ஆங்கிலிக்கன் குரு டேவிட் ரிச்சர்ட்சன், இறையியலில் முக்கிய தூண்களான திருத்தந்தையும் கான்டர்பரி பேராயரும் இங்கிலாந்தில் சந்திக்க உள்ளது முக்கியத்துவம் நிறைந்தது எனவும் கூறினார்.

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையில் பயிற்சிபெற்று உருவாகி, பின்னர் கத்தோலிக்க சபையில் இணைந்த கர்தினால் நியூமென் தற்போது திருத்தந்தையால் முத்திப்பேறுபெற்றவராக அறிவிக்கப்பட உள்ளது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார் ஆங்கிலிக்கன் குரு ரிச்சர்ட்சன்.








All the contents on this site are copyrighted ©.