2010-09-16 16:14:55

செப்டம்பர் 17 நாளும் ஒரு நல்லெண்ணம்


தினமும் அலுவலகத்துக்குச் சென்று திரும்பும் மாநகரப் பேருந்துப் பயணங்கள் புதுப் புது வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் பேருந்தில் பேசிக் கொண்டு வருவதைக் கேட்பது சுவாரஸ்யமாக இருக்கும். இப்படிப் பேசுகிறவர்கள் பெரும்பாலும் அதிகம் படிக்காதவர்களாய்த்தான் இருப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வயதான அம்மா, இப்ப நேரம் பத்து பத்தாக இருக்க முடியாதே, அதெப்படி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அந்தச் சாலையில் மாட்டப்பட்டிருந்த பொதுக் கடிகாரத்தைப் பார்த்து விட்டுத் தான் இப்படி சொல்லிக் கொண்டே வந்தார்கள். நானும் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். அப்பொழுது நேரம் பத்து மணி இருபது நிமிடங்கள். பின்னர் அந்த அம்மா என்னிடம் மணி என்ன என்று கேட்டார்கள். மணி பத்து இருபது என்று சொன்ன போது ஆம் அதுதான் சரியான நேரம் என்று ஆமோதித்தார்கள். இந்தக் கடிகாரம் எப்படிக் காட்டினால் இவர்களுக்கு என்ன என்று நானாக நினைத்துக் கொண்டேன். ஆனால், ஒரு சிறு செயலும் சரியாக இருக்க வேண்டும், எந்த ஒரு செய்தியும் பொது மக்களுக்குத் தவறானத் தகவலைக் கொடுக்கக் கூடாது என்று பல முதியவர் எதிர்பார்ப்பதைப் பலநேரங்களில் கேட்க முடிகின்றது.

இயேசு சொன்னார் – சிறு செயலில் பிரமாணிக்கமாய் இருப்பவன் பெரிய செயலிலும் பிரமாணிக்கமாய் இருப்பான் என்று.








All the contents on this site are copyrighted ©.