2010-09-15 12:35:46

செப்டம்பர் 16 – நாளும் ஒரு நல்லெண்ணம்


வழிகாட்டுவோம், அதில் எத்தனை வலிகள் கிட்டுகின்றபோதிலும்.

வழிகாட்டுபவர்கள், வாழ்ந்து பார்த்தவர்களாக, வாழ்ந்து காட்டுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.

வழிதெரிந்தவர்களே வழிகாட்டமுடியும். இல்லையெனில் பிறரை சோதனைப்பொருட்களாக நாம் பயன்படுத்தியதுபோல் ஆகிவிடும். குட்டியின் விரலை தீயில் காட்டி சோதனைச் செய்யும் குரங்கினத்திலிருந்து வேறுபடவேண்டியவர்கள் நாம். நம்மால் கடைபிடிக்க முடியாத, நமக்கு நிறைவு தராத வழிகளை நம்மால் பிறருக்கு முன் வைக்கமுடியாது. இருப்பினும் அதைத்தான் இன்றைய உலகம் செய்துகொண்டிருக்கிறது. நம்மால் முடியவில்லை எனினும் அவைகள் நல்வழிகள் என நாம் முற்றிலுமாக உணர்ந்துள்ளதால் அவைகளை மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறோம். நாம் தோற்றாலும் பிறர் ஜெயிக்கவேண்டும் என்ற நல்லுணர்வே அங்கு மறைந்து நிற்கிறது. நான் அடிபட்டேன், அலைக்கழிக்கப்பட்டேன் என்றாலும் நீயாவது பார்த்து போ என்ற அக்கறையின் வெளிப்பாடே இது. தான் தோற்றாலும் பிறர் தோற்கக்கூடாது என வழிகாட்டும் இத்தகைய நல்ல உள்ளங்கள் இன்னும் அதிகம் அதிகம் இவ்வுலகிற்கு தேவை. அத்தகைய ஒரு குழுவில் நம்மையும் இணைத்துக்கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.