2010-09-15 15:09:45

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உருவாகியுள்ள பதட்ட நிலைக்கு சமுதாய, அரசியல் காரணங்களும் உள்ளன - ஆயர் எலம்பசேரி


செப்டம்பர் 15, 2010 குரான் எரிப்பு வதந்தியையொட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உருவாகியுள்ள பதட்ட நிலைக்கு சமுதாய, அரசியல் காரணங்களும் உள்ளன என்று Jammu Srinagar ஆயர் பீட்டர் செலஸ்தீன எலம்பசேரி கூறியுள்ளார்.
இம்மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் குரான் எரிக்கப்பட்டது, அல்லது கிழிக்கப்பட்டது என்ற வதந்திகளைத் தொடர்ந்து, காஷ்மீர் பகுதியில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியும், ஒரு கிறிஸ்தவப் பள்ளியும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறைகளுக்கு வெறும் மதம் மட்டும் காரணமல்ல, மாறாக, அப்பகுதியில் நிலவும் அரசியல் பூசல்களும் காரணம் என்று ஆயர் எலம்பசேரி கூறினார். இக்கருத்தை அப்பகுதியில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததெனினும், இந்நடவடிக்கைகளுக்கு எதிரான உணர்வுகளை வெளியிட மீண்டும் வன்முறையில் ஈடுபடுவது சரியான பதிலிருப்பு அல்ல என்று அகில இந்திய மஜ்லி மற்றும் முஷவர்த் முஸ்லிம்களின் (All India Muslim Majlis-e-Mushawart) தலைவர் Syed Shahabuddin கூறினார்.







All the contents on this site are copyrighted ©.