2010-09-14 16:23:48

மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கான முயற்சிகள், ஊக்கம் தருபவைகளாக உள்ளன என்கிறார் கர்தினால் ஜான் ஃபோலி


செப்டம்பர் 14, 2010. மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கான தற்போதையப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தருபவைகளாகத் தோற்றமளிக்கவில்லையெனினும், அத்தகையை முயற்சிகள் இடம்பெறுவதே ஊக்கம் தருபவைகளாக உள்ளதாக நம்பிக்கையை வெளியிட்டார் கர்தினால் ஜான் ஃபோலி.

மத்தியக் கிழக்குப் பகுதியில் ஒரு நீடித்த நிலையான அமைதி ஏற்படுவது என்பது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும்; அதைவிட மேலாக, அப்பகுதி வாழ் கிறிஸ்தவர்களுக்கு அது உதவும்; ஏனெனில் கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வெளியேறாமல் தங்கள் சொந்த இடங்களிலேயே வாழமுடியும் என்றார் கர்தினால்.

தற்போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உயர்மட்ட அளவில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவும், அடுத்த மாதம் 10ந்தேதி முதல் 24வரை ரோம் நகரில் இடம்பெறவுள்ள மத்திய கிழக்கு நாடுகளின் ஆயர் பேரவை வழி அமைதிக்கான தூண்டுதல் கிடைக்கவும் அனைத்து விசுவாசிகளும் ஜெபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் கர்தினால் ஃபோலி.








All the contents on this site are copyrighted ©.