2010-09-14 16:25:28

பிரிட்டன் கத்தோலிக்கருள் பெரும்பான்மையினர் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு ஆதரவைத் தெரிவிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது


செப்டம்பர் 14, 2010. பிரிட்டன் கத்தோலிக்கருள் பெரும்பான்மையினர் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

YouGov என்ற அமைப்பு பன்வலைத்தளம் மூலம் பிரிட்டன் கத்தோலிக்கர்களிடம் நடத்திய ஆய்வின்படி, இவ்வாய்வில் கலந்துகொண்ட 72 விழுக்காட்டினர், திருச்சபை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவரும் இவ்வேளையில், திருத்தந்தைக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவிப்பதாகவும், திருச்சபையில் பாலர் தவறாக நடத்தப்பட்டது குறித்த புகார்கள் வருகின்றபோதிலும், தற்போது திருத்தந்தையே தலைமைப்பொறுப்பில் தொடரவேண்டும் என அவர்கள் விரும்புவதாகவும் அறிவித்துள்ளனர். தற்போது திருச்சபையை வருத்தத்தில் ஆழ்த்திவரும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கத்தோலிக்கத் திருச்சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக 87 விழுக்காட்டினர் நம்புவதாகவும் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.